’கட்டா குஸ்தி 2’ படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்

’கட்டா குஸ்தி 2’ படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்
Updated on
1 min read

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கியுள்ளது.

விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘கட்டா குஸ்தி’. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 2-ம் பாகம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கியிருக்கிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு.

‘கட்டா குஸ்தி 2’ படத்தினை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் ‘கட்டா குஸ்தி 2’விலும் நடிக்கிறார்கள். இதற்காக உருவாக்கப்பட்ட ப்ரோமோ வீடியோவுக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில், அனைவரது வீட்டிலும் நடக்கும் முக்கிய பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் பதிவு செய்யும் வகையில் இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பு சென்னை, அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in