‘எல்.சி.யூ’ நாயகர்களில் இணையும் ரவி மோகன்

‘எல்.சி.யூ’ நாயகர்களில் இணையும் ரவி மோகன்
Updated on
1 min read

எல்.சி.யூ படங்களின் நாயகர்களில் ஒருவராக இணையவுள்ளார் ரவி மோகன்.

லாரன்ஸ் நடிப்பில் ‘பென்ஸ்’ உருவாகி வருகிறது. இதன் கதையினை லோகேஷ் கனகராஜ் எழுத, திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் பாக்கியராஜ் கண்ணன். இதன் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. இப்படத்தினை ஜி ஸ்குவாட், பேஷன் ஸ்டூடியோஸ் மற்று தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இப்படத்தில் ரவி மோகனும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். லாரன்ஸ் – ரவி மோகன் இருவரும் நாயகர்களாக நடிக்க, நிவின் பாலி வில்லனாக நடித்து வருகிறார். இதற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் மூலம் எல்.சி.யூ படங்களின் நாயகர்கள் வரிசையில் இணைகிறார் ரவி மோகன்.

இதன் மூலம் ‘கைதி 2’, ‘விக்ரம் 2’ உள்ளிட்டவற்றில் நடிக்கக் கூடும். விரைவில் எல்.சி.யூவில் ரவி மோகன் இணைந்தது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவுள்ளது. ‘பென்ஸ்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ரவி மோகன் சம்பந்தப்பட்ட காட்சிகளை காட்சிப்படுத்த உள்ளது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in