சர்வதேசப் பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற படம்!

சர்வதேசப் பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற படம்!
Updated on
1 min read

பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கும் படம், ‘பிஎம்டபிள்யூ 1991’.

இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கிரீன் விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரித்துள்ள இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 22 விருதுகளைப் பெற்றுள்ளது.

படம் பற்றி பொன்​முடி திரு​மலை​சாமி கூறும்​போது, “உலகம் முழு​வதும் உள்ள அனைத்து மனிதர்​களுக்​கும் பொது​வான ஒன்று சைக்​கிள். ஒரு காலத்​தில் அதை வைத்​திருப்​பதே கவுர​வ​மாகப் பார்க்​கப்​பட்​டது. ஒரு காருக்கு நிக​ராக அதை பலர் கரு​தி​னார்​கள். அதை மையப்​படுத்​தித் தான் இதன் கதையை உரு​வாக்​கினேன். இந்​தப் படத்தை திரையரங்​குகளில் வெளி​யிடும் பணி​கள் நடந்​து வரு​கின்​றன” என்​றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in