’பிளாக்மெயில்’ வெளியீடு தள்ளிவைப்பு

’பிளாக்மெயில்’ வெளியீடு தள்ளிவைப்பு
Updated on
1 min read

ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘பிளாக்மெயில்’. ஆனால், இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. பல்வேறு படங்கள் வெளியீட்டால் போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். மேலும், அடுத்த வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in