விஜய்யின் ‘ஜனநாயகன்’ போஸ்டரை ரீ-கிரியேட் செய்த விம்பிள்டன் நிர்வாகம்!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ போஸ்டரை ரீ-கிரியேட் செய்த விம்பிள்டன் நிர்வாகம்!
Updated on
1 min read

விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்டுள்ள போஸ்டரால், ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் வேன் மீது நின்று செல்ஃபி எடுப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டார்கள். இது நிஜத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது நடந்தது என்பது நினைவுக் கூரத்தக்கது. ஆனாலும், இந்த ‘ஜனநாயகன்’ போஸ்டருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் விம்பிள்டன் நிர்வாகம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜன்னிக் சின்னருக்கு ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். கையில் கோப்பையுடன் ஜன்னிக் சின்னர் செல்ஃபி எடுப்பது போன்று இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை விம்பிள்டன் நிர்வாகம் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறது.

விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் முதல் முறையாக சின்னர் விம்பிள்டன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

‘ஜனநாயகன்’ படத்தின் எதிர்பார்ப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்று படக்குழுவினர் உற்சாகமாகி இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி விஜய்யின் ரீச் உலகளவில் மாறியிருப்பதை அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். மேலும், பலரும் இந்தளவுக்கு விஜய்க்கு எதிர்பார்ப்பு இருப்பதற்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

The reach of #ThalapathyVijay

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in