டி.ஆர் + ரஜினி வைப்... ‘கூலி’ படத்தின் ‘சிகுடு சிகுடு’ பாடல் எப்படி?

டி.ஆர் + ரஜினி வைப்... ‘கூலி’ படத்தின் ‘சிகுடு சிகுடு’ பாடல் எப்படி?

Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிகுடு சிகுடு’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடல் எப்படி? - டி.ராஜேந்தரின் சிக்னேச்சர் ஸ்டைலில், அவரது குரலில் ஒலிக்கும் தாளத்துடன் இப்பாடல் தொடங்குகிறது. ‘ஹே நவ்ருடா டேய்... சவுண்டை ஏத்து.. தேவா வாரான்டே...’ என்ற வரிகளுடன் பாடல் துவங்குகிறது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் உடன், ராப் பாடகர் அறிவு மற்றும் டி.ராஜேந்தர் இணைந்து பாடலை பாடியுள்ளனர். பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் குரலில் அந்த தாளநடை வந்துகொண்டே இருக்கிறது.

‘வம்புக்கு நீயா இழுக்காத... எங்கிட்ட மோதி இறக்காத.. பொல்லாத வேங்க.. உன் மூஞ்சி வீங்க...’ என வரும் வரிகள், ரஜினியின் இன்ட்ரோ சாங் வைப்-ஐ உறுதி செய்திருக்கிறது. மெதுவான தாளத்துடன் ஒலிக்கும் இந்தப் பாடலுக்கு சாண்டியின் ஆர்பாட்டம் இல்லாத ஸ்டெப்ஸ்களை ரஜினி தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக ஆடியிருக்கிறார். இப்பாடல் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், செளபின் சாகீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in