ரூ.75 கோடி... ‘கூலி’ வெளிநாட்டு உரிமையில் வியத்தகு பிசினஸ்!

ரூ.75 கோடி... ‘கூலி’ வெளிநாட்டு உரிமையில் வியத்தகு பிசினஸ்!
Updated on
1 min read

‘கூலி’ படத்தின் வெளிநாட்டு உரிமை பெரும் போட்டிக்கு இடையே அதிக தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் உரிமைகள் விற்பனை தொடங்கியிருக்கிறது. முதலாவதாக கடும் போட்டிகளுக்கு இடையே வெளிநாட்டு உரிமம் விற்பனையாகி இருக்கிறது.

‘கூலி’ படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் சுமார் 75 கோடி ரூபாய் ‘எமி.ஜி’அடிப்படையில் கைப்பற்றி இருக்கிறது. இந்த விலைக்கு எந்தவொரு தமிழ் படத்தின் வெளிநாட்டு உரிமமும் விற்பனையானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த உரிமத்தையும் சிலர் ரூ.81 கோடிக்கு விநியோக அடிப்படையில் கேட்டார்கள். அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்து, ஐங்கரன் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. இந்த வியாபாரம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. விரைவில் இப்படத்தில் இருந்து பாடலொன்றை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in