விஜய் பிறந்த நாளுக்கு ‘மெர்சல்’ ரீரிலீஸ்!

விஜய் பிறந்த நாளுக்கு ‘மெர்சல்’ ரீரிலீஸ்!
Updated on
1 min read

விஜய் பிறந்த நாளன்று ‘மெர்சல்’ திரைப்பட மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.

ஜூன் 22-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார் விஜய். அன்றைய தினம் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக கட்சியினர் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட இருக்கிறார்கள். அன்றைய தினத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தைத் தாண்டி ‘மெர்சல்’ படமும் அன்றைய தினத்தில் மறுவெளியீடு செய்ய முடிவு செய்திருக்கிறது படக்குழு. இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அட்லி இயக்கத்தில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in