மீண்டும் இயக்குநராக களமிறங்கும் பிரதீப் ரங்கநாதன்!

மீண்டும் இயக்குநராக களமிறங்கும் பிரதீப் ரங்கநாதன்!
Updated on
1 min read

‘டூட்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் படம் ஒன்றை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

கீர்த்திவாசன் இயக்கிவரும் ‘டூட்’ (DUDE) படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். தீபாவளி வெளியீடாக இருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, மீண்டும் படமொன்றை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதனை ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் இப்படத்தின் திரைக்கதையினை எழுதி முடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். விரைவில் முதற்கட்டப் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு.

முன்னதாக ‘லவ் டூடே’ படத்தினை இயக்கி நாயகனாக நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ச்சியாக நாயகனாக நடித்து வந்தார். தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்க திட்டமிட்டு பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in