ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது ‘படை தலைவன்’

ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது ‘படை தலைவன்’
Updated on
1 min read

சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் ஜூன் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம் ‘படை தலைவன்’. இப்படம் மே 23-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் திரையரங்குகள் சரியாக கிடைக்காத காரணத்தினால் இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூன் 13-ம் தேதி ‘படை தலைவன்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், கருடன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பெரும்பாலான காட்சிகளை காடுகளுக்குள் படமாக்கி இருக்கிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சதீஷ் குமார், இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

’படை தலைவன்’ படத்தின் விநியோக உரிமையினை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in