ரஜினி பிறந்த நாளில் ‘அண்ணாமலை’ ரீரிலீஸ்

ரஜினி பிறந்த நாளில் ‘அண்ணாமலை’ ரீரிலீஸ்

Published on

ரஜினி பிறந்த நாளன்று ‘அண்ணாமலை’ படம் ரீரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1992-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘அண்ணாமலை’. இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளன்று ‘அண்ணாமலை’ ரீரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது ஏற்றவகையில் தொழில்நுட்ப மாற்றம் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, சரத்பாபு, குஷ்பு, மனோரமா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அண்ணாமலை’. இதன் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. ஆகவே இப்போதும் மறுவெளியீட்டில் ‘அண்ணாமலை’ வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in