Last Updated : 04 Jun, 2025 12:56 PM

 

Published : 04 Jun 2025 12:56 PM
Last Updated : 04 Jun 2025 12:56 PM

தக் லைஃப் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கான சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதன்படி நாளை ஒருநாள் மட்டும் தமிழகத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ‘தக் லைஃப்’ திரைப்படத்தை நாளை காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ‘தக் லைஃப்’ திரைப்படத்தை நாளை மொத்தம் 5 காட்சிகள் திரையிடலாம். தமிழக அரசின் இந்த அறிவிப்பால் கமல் மற்றும் சிலம்பரசன் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x