‘முதலில் சினிமா ரசிகன்; பின்பு தான் நடிகன்’ - கமல் பேச்சு

‘முதலில் சினிமா ரசிகன்; பின்பு தான் நடிகன்’ - கமல் பேச்சு
Updated on
1 min read

முதலில் சினிமா ரசிகன், பின்பு தான் நான் நடிகன் என்று கமல்ஹாசன் பேசும் போது குறிப்பிட்டுள்ளார். ’தக் லைஃப்’ படத்தினை விளம்பரப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் கமல். தற்போது வெளிநாடுகளில் படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “’தக் லைஃப்’ படத்தை பாருங்கள். இதில் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். முதலில் சினிமா ரசிகன், பின்பு தான் நடிகன். நான் ‘தக் லைஃப்’ பார்த்துவிட்டேன். உங்களுக்கு வைக்கப்போகும் விருந்தில் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு பார்த்துவிட்டேன்.

மணிரத்னம், கமல்ஹாசன் இருவருமே எனக்கு தெரியாது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இப்படம் என்னிடம் பேசியது. அந்த உரையாடலின் நீட்சியாகவே இங்கு தைரியமாக பேசிக் கொண்டிருக்கிறேன். சிறு தடங்கல்கள் வந்தாலும் நீங்கள் என்னை தூக்கிக் கொண்டு போய் இறக்க வேண்டிய இடத்தில் இறக்கிவிடுவீர்கள்” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். தமிழகத்தில் இன்று காலை முதல் ‘தக் லைஃப்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in