சசி - விஜய் ஆண்டனி படத்தில் இணையும் ஸ்வாசிகா!

சசி - விஜய் ஆண்டனி படத்தில் இணையும் ஸ்வாசிகா!
Updated on
1 min read

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தில் ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

‘பிச்சைக்காரன்’ கூட்டணியான விஜய் ஆண்டனி – சசி இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் பணிபுரிய இருக்கிறார்கள். இதனை ரமேஷ் பிள்ளை தயாரிக்கவுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படம் தமிழகத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக இருக்கிறது.

தற்போது விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து தயாரித்துள்ள ‘மார்கன்’ படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘சக்தி திருமகன்’ படம் வெளியாகவுள்ளது. இதனை முடித்துவிட்டு ‘லாயர்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் பணிகளை முடித்துவிட்டே சசி இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் ஆண்டனி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in