சிவகார்த்திகேயன் மீதான ‘ட்ரோல்’கள் - ‘லப்பர் பந்து’ இயக்குநர் ஆதங்கம்

சிவகார்த்திகேயன் மீதான ‘ட்ரோல்’கள் - ‘லப்பர் பந்து’ இயக்குநர் ஆதங்கம்
Updated on
1 min read

இணையத்தில் சிவகார்த்திகேயன் சார்ந்து எழுந்துள்ள கிண்டல்களுக்கு, ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார் சிவகார்த்திகேயன். சில படங்கள் வெளியானபோது அதனை பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். அதுவே இப்போது ‘ட்ரோல்’ வடிவில் அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது. இந்தப் போக்கை முன்வைத்து பல்வேறு வகையில் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்து ட்வீட்கள் வந்து கொண்டிருக்கின்றன.

‘கூலி’ டீசர் பார்த்துவிட்டு ரஜினியை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன், ‘மிஷன் இம்பாஸிபிள்’ பார்த்துவிட்டு டாம் க்ரூஸை பாராட்டிய சிவகார்த்திகேயன் என்றெல்லாம் புகைப்படங்களை மார்பிங் செய்து ட்வீட்கள் வருகின்றன. இது மிகவும் தவறான போக்கு என்று விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனது எக்ஸ் தள பதிவில், “எங்கள மாதிரி ஒரு அறிமுக இயக்குநர் படம் ரிலீஸ் ஆகுறப்போ, திரையுலகுல இருக்குற ஸ்டார்ஸ் படம் பார்த்துட்டு படத்த பாராட்டி ஒரு ட்வீட்டோ இல்ல ஒரு பேட்டி குடுக்குறதோ அந்தப் படத்துக்கு எவ்ளோ பெரிய சப்போர்ட்-னு என்ன மாதிரி அறிமுக இயக்குநர்களுக்கே புரியும்.

சிவகார்த்திகேயன் சார் ரொம்ப நன்றி. நாங்க படம் பாக்க கூப்டதும் வந்து பாத்துட்டு நீங்க சொன்ன வார்த்தைகள் பட விளம்பரத்துக்கு மட்டுமல்ல எனக்கும் பெரிய சப்போர்ட். மீண்டும் ஒரு முறை நன்றி எனக்காக மட்டுமில்ல சார், என் போன்ற நிறைய அறிமுக இயக்குநர் சார்பாகவும்” என்று தெரிவித்துள்ளார்.

https://t.co/9sJMHH75Db pic.twitter.com/Es4YCbgQv4

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in