“விஷாலுடன் ஆகஸ்ட் 29-ல் திருமணம்” - உறுதி செய்த சாய் தன்ஷிகா

“விஷாலுடன் ஆகஸ்ட் 29-ல் திருமணம்” - உறுதி செய்த சாய் தன்ஷிகா
Updated on
1 min read

‘யோகிடா’ படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஷாலுடன் தனக்கு திருமணம் ஆக இருப்பதை உறுதி செய்துள்ளார் நடிகை சாய் தன்ஷிகா.

நடிகர் சங்க கட்டிடம் முடிந்து, அதில்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார் விஷால். அவருக்கு சில காதல் தோல்விகளும் ஏற்பட்டன. இதனால் யாரை திருமணம் செய்யவுள்ளார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்தப் பின்னணியில், சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று இன்று காலை முதல் தகவல் பரவியது.

‘கபாலி’, ‘பேராண்மை’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா. இது தொடர்பாக விசாரித்தபோது, சில வருடங்களாக விஷால் - சாய் தன்ஷிகா காதலித்து வருகிறார்கள் என்றும் நட்பாக பேசத் தொடங்கி, பின்பு காதலாக மாறிவிட்டது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையில் சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். மேடையில் பேசிய சாய் தன்ஷிகா விஷாலுக்கும் தனக்கும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதை உறுதி செய்தார். இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in