கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ட்ரெய்லர் நாளை ரிலீஸ்!

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ட்ரெய்லர் நாளை ரிலீஸ்!
Updated on
1 min read

சென்னை: கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர் நாளை (மே 17) வெளியாக உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நிறுத்தப்பட்டதால் மீண்டும் படத்துக்கான விளம்பரங்களை தொடங்கி இருக்கிறது படக்குழு. அதன் படி நாளை (மே 17) ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் மே 24 சென்னையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

படத்தின் புரோமோஷன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், அதன் ஒரு பகுதியாக கமல்ஹாசன், சிலம்பரசன், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in