விஜய்யை வைத்து ‘மாஸ்டர் 2’ எடுக்க விரும்புகிறேன்: லோகேஷ் கனகராஜ் பகிர்வு

விஜய்யை வைத்து ‘மாஸ்டர் 2’ எடுக்க விரும்புகிறேன்: லோகேஷ் கனகராஜ் பகிர்வு
Updated on
1 min read

விஜய்யை வைத்து ‘மாஸ்டர் 2’ படம் எடுக்க விரும்புவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியது: “இயக்குநர் விஜய்யுடன் அனைவரும் ‘லியோ 2’ நான் பண்ண வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், எனக்கு அவரை வைத்து ‘மாஸ்டர் 2’ எடுக்க விரும்புகிறேன். காரணம், அதில் சொல்லப்பட வேண்டிய கதை ஒன்று முழுமை பெறாமல் இருப்பது போல எனக்கு தோன்றியது. அதில் அவரை ஜேடி கதாபாத்திரத்தில் பார்ப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடிக்கும்.

’கூலி’ படத்தைப் பொறுத்தவரை எந்த பிரஷரும் இல்லாமல் வேலை செய்கிறேன். முந்தைய படங்களில் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டுதான் ஷூட்டிங் செல்வோம். ஆனால், இந்த படத்தில் அதை தவிர்த்து விட்டேன். முந்தைய தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது என்பதாலேயே இந்த முடிவு.

’ஆர்ஆர்ஆர்’ போல 3, 4 வருடங்கள் நடிகர்களை வைத்து படமெடுக்கும் சூழலில் நான் இல்லை. அதிகபட்சம் 6 முதல் 8 மாதங்கள்தான். பொதுவாக என் படத்தில் நடிகர்களிடம் கெட்-அப் மாற்றக் கூடாது, வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று நான் சொல்வதில்லை” என்று லோகேஷ் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in