பெரும் விலைக்கு விற்கப்பட்ட சூர்யா - வெங்கி அட்லுரி படம்!

பெரும் விலைக்கு விற்கப்பட்ட சூர்யா - வெங்கி அட்லுரி படம்!
Updated on
1 min read

சூர்யா - வெங்கி அட்லுரி இணையும் படத்தின் ஓடிடி உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் வசூல் ரீதியாக படம் வெற்றியா, தோல்வியா என்பது தெரியவரும். தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி படத்தின் பணிகளை முடிக்கும் முன்பே, வெங்கி அட்லுரி படத்தின் பணிகளைத் தொடங்க சூர்யா திட்டமிட்டு இருக்கிறார். நாக வம்சி தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இன்னும் படப்பிடிப்பே தொடங்காத நிலையில் இதன் ஓடிடி உரிமையினை 85 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம். இது பெரும் விலையாகும். வெங்கி அட்லுரியின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. இதனை கணக்கில் கொண்டே இப்படத்துக்கு பெரும் விலையைக் கொடுத்திருக்கிறது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in