‘கங்குவா’ தோல்வி: சூர்யாவின் சூசக பேச்சு

‘கங்குவா’ தோல்வி: சூர்யாவின் சூசக பேச்சு
Updated on
1 min read

‘கங்குவா’ தோல்வி குறித்து மறைமுகமாக தனது பேச்சில் குறிப்பிட்டார் சூர்யா.

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் சூர்யா, ‘ரெட்ரோ’ படக்குழுவினர் குறித்தும், அவர்களுடைய பணி குறித்தும் பேசினார்.

கடந்த முறை ‘கங்குவா’ படத்துக்கு விளம்பரப்படுத்தும்போது, சூர்யா நடனமாடினார். அந்தப் பாடல்கள் எல்லாம் பாடப்பட்டாலும், சூர்யா வெறுமனே கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ பதிவினை முன்வைத்து பலரும் இணையத்தில் “உங்களை இப்படி பார்த்ததில்லை சூர்யா” எனப் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

இதனிடையே சூர்யா தனது பேச்சினை முடிக்கும் முன்பு, ‘கங்குவா’ தோல்வி குறித்து மறைமுகமாக பேசினார். அதில் “பாக்சிங் போட்டிகளில் நீங்கள் விழும்போது தோற்பதில்லை. எழுந்திருக்க மறுக்கும் போதுதான் தோற்றுவிடுகிறீர்கள். நாங்கள் மீண்டும் பெரியளவில் மீண்டு வருவோம். மீண்டும் ஒரு வலுவான அடி கொடுப்போம். ‘ரெட்ரோ’ ஒரு அழகான பொழுதுபோக்கு படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார் சூர்யா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in