ஃபேன்டஸி படமாக உருவாகும் ’யோலோ’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஃபேன்டஸி படமாக உருவாகும் ’யோலோ’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

இயக்குநர் சாம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘யோலோ’. புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்கிறார். இதில் தேவிகா, படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

ஃபேன்டஸி ரோம்காம் பாணி திரைப்படமாக உருவாகும் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள “யோலோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஐயாம் ஃபரம் உளுந்தூர்பேட்டை என்ற முதல் சிங்கிள் பாடலும் வெளியாகியுள்ளது.

அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம் இப்படத்தை இதனை இயக்கியுள்ளார். சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். இதில் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in