மார்ச் 10 முதல் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்

மார்ச் 10 முதல் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

மார்ச் 10-ம் தேதி முதல் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்குகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘ஜெயிலர் 2’. இதன் அறிமுக ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதன் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது. காலையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இதன் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகுகிறது. இதில் நடித்த அனைவருமே 2-ம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில புதிய கதாபாத்திரங்களையும் இணைத்துள்ளார் நெல்சன்.

தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரியவுள்ளார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in