விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்குமார்

விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்குமார்
Updated on
1 min read

நடிகர் அஜித்குமார், சொந்தமாக கார் ரேஸ் அணியை வைத்திருக்கிறார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் அவரது அணி 3-வது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார்.

இப்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் கார் ரேஸில் அவரது அணி கலந்துகொள்கிறது. இதற்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டபோது மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர், “நான் என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் நன்றி. சமீபத்திய பயிற்சியில் கூட என் கார் சிறிய விபத்தைச் சந்தித்தது. உடனடியாக கார் சரி செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in