புழல் சிறையில் படமாக்கப்பட்ட ‘அக்யூஸ்ட்’

புழல் சிறையில் படமாக்கப்பட்ட ‘அக்யூஸ்ட்’
Updated on
1 min read

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, புழல் மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று ‘அக்யூஸ்ட்’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உதயா மற்றும் அஜ்மல் உள்ளிட்ட நடிகர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க நடைபெற்று வருகிறது. தற்போது சென்னைக்கு அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் சண்டைக் காட்சிகளை ஸ்டன் சில்வா இயக்கி வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவாக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் ‘அக்யூஸ்ட்’.

இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் உதயா நடித்து வருகிறார். ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘அக்யூஸ்ட்’ படத்தினை தயாரித்து வருகின்றன. இப்படத்தை கன்னட இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கி வருகிறார். ஜான்வி நாயகியாக நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மருத நாயகன், இசையமைப்பாளராக நரேன் பாலகுமார் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in