‘விஜய் 69’ ஃபர்ஸ்ர் லுக் குடியரசு தினத்தில் வெளியீடு!

‘விஜய் 69’ ஃபர்ஸ்ர் லுக் குடியரசு தினத்தில் வெளியீடு!
Updated on
1 min read

‘விஜய் 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. தீவிர அரசியலில் ஈடுபடும் முன்பு, தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதனை ஹெச்.வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்பையும் சென்னையில் துவங்க பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

தற்போது குடியரசு தினமான ஜனவரி 26 அன்று ‘விஜய் 69’ படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இப்படம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக், இதன் தலைப்பு ‘நாளைய தீர்ப்பு’ என்றெல்லாம் செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அனைத்துக்கும் ஜனவரி 26-ம் தேதி விடை கிடைத்துவிடும். ஹெச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன், பிரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யா, இசையமைப்பாளராக அனிருத், கலை இயக்குநராக செல்வா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Update oda vandhurkom
69% completed #Thalapathy69FirstLookOnJan26 #Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasupic.twitter.com/FA2MbAjdAY

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in