அஜித் லேட்டஸ்ட் ஒளிப்படங்கள் - ரீலா... ரியலா..?

அஜித் லேட்டஸ்ட் ஒளிப்படங்கள் - ரீலா... ரியலா..?
Updated on
1 min read

அண்மையில் வெளியான நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அஜித் ஃபிட்டான உடல் வாகுடன் இல்லாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ‘வீரம்’ திரைப்படத்துக்குப் பிறகு பெரும்பாலும் வயதான தோற்றத்திலேயே அஜித் இருந்ததை அவரது ஆருயிர் ரசிகர்களும்கூட விரும்பவில்லை.

இந்நிலையில், உடல் எடையைக் குறைத்து, கோட்-சூட் அணிந்தபடி கட்டுக்கோப்பாக அவர் இருக்கும் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. எப்போதும் அப்டேட்டுகளுக்கு அடித்துக்கொள்ளும் ரசிகர்கள், அஜித் நடிப்பில் உருவாகும் இரண்டு படங்களின் படக்குழுவும் ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளதால் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஒரு பக்கம் ‘தமிழ்நாட்டின் ஜேம்ஸ் பாண்ட்’, ‘ஹாலிவுட்டில் நடிக்கத் தகுதியான ஒரே தமிழ் நடிகர்’ என்றெல்லாம் ரசிகர்கள் டமாரம் அடிக்கும் நிலையில், இந்த ஒளிப்படங்கள் போலியானது என்றும், கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட படங்கள் என்றும் விஜய் ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். இதனால் போலி இல்லை என நிரூபிக்கும் வேலைகளில் மும்மரமாக இறங்கி இருக்கிறதாம் அஜித் படை. அஜித்தே... கடவுளே! - சிட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in