“மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது பெருமை” - ‘தக் லைஃப்’ குறித்து, ‘மிர்சாபூர்’ நடிகர் நெகிழ்ச்சி

“மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது பெருமை” - ‘தக் லைஃப்’ குறித்து, ‘மிர்சாபூர்’ நடிகர் நெகிழ்ச்சி
Updated on
1 min read

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் ‘மிர்சாபூர்’ இணையத் தொடர் மூலம் கவனம் பெற்ற நடிகர் அலி ஃபசல் நடிக்கிறார். அவர் தனது படப்பிடிப்பைமுடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் நிறுனவத்துக்கு அளித்த பேட்டியில், “மணிரத்னத்தின் இயக்கத்தில் பணியாற்றுவது பெருமையான விஷயம். கமல்ஹாசன் மற்றும் பிற நடிகர்களுடன் இணைந்து நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். ஒரு நடிகராக கடந்த 2 மாதங்களில் நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். தமிழ் கற்றுக்கொண்டு புதிய திரையுலக கலாச்சாரத்துக்குள் என்னை உட்படுத்திக்கொண்டு, என்னுடைய எல்லைகளை விரிவடையச் செய்வது மகிழ்ச்சி.” என்றார்.

மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சிம்பு, த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், அலி ஃபசல், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in