‘சூது கவ்வும் 2’ படத்துக்கு இப்படியொரு சோதனையா?

‘சூது கவ்வும் 2’ படத்துக்கு இப்படியொரு சோதனையா?
Updated on
1 min read

‘சூது கவ்வும் 2’ படத்துக்கு இப்படியொரு சோதனையா என்று அனைவரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள்.

‘சூது கவ்வும்’ படத்தின் பின்னணி இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது ‘Sudden Delight’ என்ற இசை. இதனை தனியாகவும் யூ-டியூப் தளத்தில் வெளியிட்டது படக்குழு. தற்போது ‘சூது கவ்வும் 2’ படத்தை உருவாக்கி வருகிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

இதனை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியிருக்கிறார். இதில் மிர்ச்சி சிவா, ஹரிஷா, ராதாரவி, கருணாகரண், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதன் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அப்போது முதல் பாகத்தில் இருந்து சில பின்னணி இசைக்கோர்ப்புகளை இதில் பயன்படுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதற்கு ‘சூது கவ்வும்’ படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ள இசை நிறுவனம் கோடிகளில் பணம் கேட்டிருக்கிறார்கள். இதனை சி.வி.குமார் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து சி.வி.குமார், “எண்ட சூதுகவ்வும் படத்தோட ஹிட் தீம் மியூசிக் Sudden Delight-அ எண்ட சூதுகவ்வும் 2 படத்திலயே யூஸ் பண்ண முடியல.. காப்பிரைட்க்கு கோடில கேட்டாக ஆடியோ கம்பேனி… நாமளும் கடவுளோட கோர்ட்டுக்கு அந்த கம்பேனிய இழுக்கலாமா?” என்று எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

‘சூது கவ்வும்’ படத்தின் தயாரிப்பாளரே அந்த இசையை 2-ம் பாகத்துக்கு உபயோகப்படுத்த முடியவில்லை என்பது தான் கொடுமை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in