நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம்

நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம்

Published on

சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (80), வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை இரவு காலமானார். அவர் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடந்தது. அவரது மகன் மகா மற்றும் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். டெல்லி கணேஷ், இந்திய விமானப் படையில் பணியாற்றியவர் என்பதால் அவரது வீட்டுக்குச் சென்ற விமானப் படை வீரர்கள், உடல் மீது தேசியக் கொடியை போர்த்தியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் ராமாபுரத்தில் உள்ள வீட்டிலிருந்து டெல்லி கணேஷின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். பின்னர் நெசப்பாக்கம் மின் மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in