‘ப்ளடி பெக்கர்’ வித்தியாசமான முயற்சி: லோகேஷ் கனகராஜ்

‘ப்ளடி பெக்கர்’ வித்தியாசமான முயற்சி: லோகேஷ் கனகராஜ்

Published on

‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம் வித்தியாசமான முயற்சி என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சிவபாலன் இயக்கத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார் நெல்சன். இதன் தமிழக உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி வெளியிட்டுள்ளார்.

இப்படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. விமர்சன ரீதியாகவும் வரவேற்பு இல்லை. இதனிடையே நண்பர் நெல்சனின் தயாரிப்பு என்பதால், லோகேஷ் கனகராஜ் ‘ப்ளடி பெக்கர்’ படத்தைப் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மத்தியில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “‘ப்ளடி பெக்கர்’ பார்த்தேன். ரொம்பவே பிடித்திருந்தது, ஒரு வித்தியாசமான முயற்சி. இதே போன்று ஆங்கில படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன், தமிழில் இது புதிதாக இருந்தது.

நண்பர் நெல்சன் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். கவின் அற்புதமாக நடித்திருக்கிறார். எமோஷன் காட்சிகளை எல்லாம் ரொம்ப எளிதாக நடித்திருந்தார். அது ரொம்பவே கடினம். படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள். வித்தியாசமான படமொன்றை காண வேண்டுமென்றால் கண்டிப்பாக ’ப்ளடி பெக்கர்’ பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in