‘கங்குவா’ அதிகாலைக் காட்சி - அரசுக்கு படக்குழு கோரிக்கை

‘கங்குவா’ அதிகாலைக் காட்சி - அரசுக்கு படக்குழு கோரிக்கை
Updated on
1 min read

‘கங்குவா’ படத்தின் அதிகாலைக் காட்சிக்கு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது படக்குழு. சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் நவம்பர் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.

தமிழகம் தவிர்த்து இதர மாநிலங்கள் மற்றும் வெளிநாடு என அனைத்திலுமே அதிகாலை 4 மணிக் காட்சிக்கு அனுமதி கிடைத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசுக்கும் அதிகாலை 4 மணிக்கு காட்சிக்கு அனுமதிக் கோரியிருக்கிறது படக்குழு. இதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் ‘கங்குவா’ படத்துக்கான KDM தொடங்க படக்குழு முடிவு செய்திருப்பது தெரிகிறது. ஏனென்றால் சில படங்கள் நேர மாற்றத்தினால் விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை கணக்கில் கொண்டே ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் தொடங்கவுள்ளார்கள்.

‘கங்குவா’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை பிடிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in