ஆக.31-ல் காதலியை மணக்கிறார் நடிகர் சென்ராயன்

ஆக.31-ல் காதலியை மணக்கிறார் நடிகர் சென்ராயன்
Updated on
1 min read

'பொல்லாதவன்', 'மூடர் கூடம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த உறுதுணை நடிகர் சென்ராயனுக்கு இம்மாதம் 31-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அவர் தனது காதலியை மணக்கிறார்.

தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படத்தில் பைக் திருடும் நபராக அறிமுகமானவர் உறுதுணை நடிகர் சென்ராயன். அதைத் தொடர்ந்து 'சிலம்பாட்டம்', 'ஆடுகளம்', 'மூடர்கூடம்' உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். ஜீவா நடித்த 'ரௌத்திரம்' படத்தில் முக்கிய வில்லனாகவும் நடித்தார்.

இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31-ம் தேதி கயல்விழியை திருமணம் செய்துகொள்கிறார்.

வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்தில் கலையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in