

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளது.
’விஜய் 69’ படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் சிம்ரன் மீண்டும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், இதில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முடிவாகிவிட்டது. இதன் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், எடிட்டராக பிரதீப்.இ.ராகவ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. முழுநேர அரசியலுக்குள் நுழையும் முன் விஜய் நடிக்கவுள்ள கடைசி படம் இது என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
விரைவில் படப்பூஜை நடத்தி படப்பிடிப்பு தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் பணிகளை முடிக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு தகுந்தாற் போல் படக்குழுவினரும் பணிகளை விரைந்து முடிக்க பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.