லோகேஷ் - ரஜினியின் ‘கூலி’யில் சவுபின் ஷாயிர் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர்!

லோகேஷ் - ரஜினியின் ‘கூலி’யில் சவுபின் ஷாயிர் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர்!
Updated on
1 min read

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘தயாள்’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

போஸ்டர் எப்படி? - ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் சவுபின் ஷாயிருக்கு இது முதல் தமிழ்ப் படம். போஸ்டரை பொறுத்தவரை சட்டை அணியாமல், வாயில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு, கையில் இருக்கும் வாட்சை பார்த்துக் கொண்டிருக்கிறார் சவுபின். அவர் இந்தப் படத்தில் ‘தயாள்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரவுடிகளில் கூட்டத்தில் இருப்பவரா அல்லது படத்தில் வில்லனா அல்லது ரஜினியின் நண்பரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் சவுபின் வருகை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in