கோட் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

கோட் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் 68-வது படமாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (தி கோட்) உருவாகி இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செப். 5-ம் தேதி வெளியாகும் இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in