‘வணங்கான்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

‘வணங்கான்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்
Updated on
1 min read

பாலா இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘வணங்கான்'. இதை பாலாவின் பீ ஸ்டூடியோஸ் நிறுவனம், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இதில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அவர் மற்ற படங்களில் பிசியானதால் சாம்.சி.எஸ், பின்னணி இசை அமைக்கிறார். இதற்கிடையே இந்தப் படத்துக்குத் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in