மும்பையில் ரூ.17 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய மாதவன்

மும்பையில் ரூ.17 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய மாதவன்
Updated on
1 min read

நடிகர் மாதவன், தமிழில் சசிகாந்த் இயக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சித்தார்த், நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர். அடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடித்து வரும் அவர், இந்தியிலும் நடித்து வருகிறார். மும்பையில் குடும்பத்துடன் வசித்து வரும் மாதவன், அங்கு பிரபலமான பாந்த்ரா குர்லா வளாகத்தில் புதிய சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். 4182 சதுர அடி கொண்ட இந்த வீட்டை அவர் ரூ.17.5 கோடிக்கு வாங்கியுள்ளார். இதன் பத்திரப்பதிவுக்கு ரூ.1.05 கோடி செலுத்தியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in