கார்த்தியின் ‘சர்தார் 2’-வில் இணைந்தார் எஸ்.ஜே.சூர்யா

கார்த்தியின் ‘சர்தார் 2’-வில் இணைந்தார் எஸ்.ஜே.சூர்யா
Updated on
1 min read

கார்த்தி நடித்த ‘சர்தார்’ படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்தப் படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அவர் வில்லனாக நடிப்பார் என்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in