அர்ஜுன் தாஸுடன் இணையும் அதிதி ஷங்கர்: படப்பிடிப்பு தொடக்கம்

அர்ஜுன் தாஸுடன் இணையும் அதிதி ஷங்கர்: படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியானது ‘ரசவாதி’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதிதி ஷங்கர் ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர்கள் இருவரும் இணையும் புதிய படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்குகிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அடுத்த ஆண்டு படம் திரைக்கு வரும் என தெரிகிறது. அதிதி ஷங்கர் நடிப்பில் அடுத்தாக விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள ‘நேசிப்பாயா’ படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in