“கங்குவா படத்தின் இரண்டாம் பாகம் 2027-ல் வெளியாகும்” - ஞானவேல் ராஜா தகவல் 

“கங்குவா படத்தின் இரண்டாம் பாகம் 2027-ல் வெளியாகும்” - ஞானவேல் ராஜா தகவல் 
Updated on
1 min read

சென்னை: “கங்குவா படத்தின் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு ஜனவரி அல்லது கோடை காலத்தில் வெளியாகும்” என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களைக் கொண்டது. எழுதும்போதே 2 பாகங்களாக தான் எழுதப்பட்டது. தற்போது முதல் பாகம் முடிந்துள்ளது. இதற்கு 185 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் . தொடர்ந்து ‘கங்குவா’ இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு ஜனவரியில் அல்லது கோடைக்காலத்தில் வெளியாகும்” என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in