தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு சர்வேதச அங்கீகாரம்!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு சர்வேதச அங்கீகாரம்!
Updated on
1 min read

லண்டன்: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடமி திரைப்பட விருது விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்றுப் பின்னணியில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியது. இப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த 10 வது லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடமி திரைப்பட விருது விழாவில் ‘கேப்டன் மில்லர்’, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படதுக்கான விருதை பெற்றுள்ளது. அடுத்து தனுஷ் நடிப்பில் ‘ராயன்’, ‘குபேரா’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in