சூப்பர் சிங்கர் - சீசன் 10: டைட்டில் வென்றார் ஜான் ஜெரோம்; ரூ.60 லட்சம் மதிப்பு வீடு பரிசு

சூப்பர் சிங்கர் - சீசன் 10: டைட்டில் வென்றார் ஜான் ஜெரோம்; ரூ.60 லட்சம் மதிப்பு வீடு பரிசு
Updated on
1 min read

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் -சீசன் 10 நிகழ்ச்சி, கடந்த 26 வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது. பாடகர் மனோ, பாடகிகள் சுஜாதா, அனுராதா ஸ்ரீராம், இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் நடுவர்களாக செயல்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இறுதிப்போட்டிக்கு ஜான் ஜெரோம், விக்னேஷ், ஜீவிதா, வைஷ்ணவி, ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வாகி இருந்தனர். இதில் ஜான் ஜெரோம் முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. ஜீவிதா 2-ம் இடம் பிடித்தார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. 3-வது இடத்தை பிடித்த வைஷ்ணவிக்கு ரூ.5 லட்சமும் 4- மற்றும் 5-ம் இடங்களைப் பிடித்த நிதி மற்றும் விக்னேஷுக்கு தலா ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in