“பவதாரிணி குரலை இப்படி பதிவு செய்வேன் என நினைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா உருக்கம்

“பவதாரிணி குரலை இப்படி பதிவு செய்வேன் என நினைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா உருக்கம்
Updated on
1 min read

சென்னை: “பவதாரிணி மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வந்ததும் அவருடைய குரலில் பாடலை பதிவு செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால், ஒரு மணிநேரம் கழித்து அவர் மறைந்த செய்தி கிடைத்தது. அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை” என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இரண்டாவது சிங்கிள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூருவில் இந்தப் பாடலை நான் இசையமைத்த போது, நானும், வெங்கட்பிரபுவும் இந்தப் பாடலை சகோதரி பாடினால் சரியாக இருக்கும் என நினைத்தோம். அவர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வந்ததும் அவருடைய குரலில் பாடலை பதிவு செய்யலாம் என நினைத்திருந்தேன்.

ஆனால், ஒரு மணிநேரம் கழித்து அவர் மறைந்த செய்தி கிடைத்தது. அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனது இசைக்குழுவினருக்கும், இந்த சாத்தியப்படுத்தியதில் பங்காற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு விவரிக்க முடியாத தருணம்” என தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் 2வது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், மறைந்த பாடகருமான பவதாரிணியின் குரல் ‘ஏஐ’ மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in