கிருத்திகா உதயநிதி - ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’: கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

கிருத்திகா உதயநிதி - ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’: கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Updated on
1 min read

சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் கிருத்திகா உதயநிதி. இவர் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘பேப்பர் ராக்கெட்’ வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

விரைவில் டீசர், ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் துள்ளலான பாடல் ஒலிக்க, ஜெயம் ரவி, நித்யா மேனன் இருவரும் இருக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த கிளிம்ப்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

இதற்கிடையே, தமிழில் இதற்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு இதே தலைப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in