ரஜினிக்கு வில்லன் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்

ரஜினிக்கு வில்லன் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்
Updated on
1 min read

பிரபுதேவா நடிப்பில் வெளிவரவுள்ள ‘மெர்க்குரி’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்த பிறகு தொடங்க இருக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் முதன்முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில், ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்ற கார்த்திக் சுப்பாராஜ், நவாஸுதீனிடம் கதை சொல்லியிருக்கிறார். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இவர் ‘தலாஷ்’ படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in