“சர்ப்ரைஸ்களை வெளியே சொல்லாதீர்கள்” - ரசிகர்களுக்கு ‘ஸ்டார்’ பட இயக்குநர் வேண்டுகோள்

“சர்ப்ரைஸ்களை வெளியே சொல்லாதீர்கள்” - ரசிகர்களுக்கு ‘ஸ்டார்’ பட இயக்குநர் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: “படத்தில் உள்ள சர்ப்ரைஸ்களை வெளியில் சொல்ல வேண்டாம்” என ‘ஸ்டார்’ படத்தின் இயக்குநர் இளன் பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஸ்டார் நாளை முதல். இந்தப் படத்தை என்னுடைய தந்தை ‘ஸ்டில்ஸ் பாண்டியன்’ அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். உங்களிடம் தாழ்மையான வேண்டுகோள். நாளை நீங்கள் படத்தை பார்த்துவிட்டு, படத்தில் உள்ள மூன்று முக்கியமான சர்ப்ரைஸை வெளியில் சொல்ல வேண்டாம். என்னுள் இருக்கும் கலைஞன் எல்லாரும் அந்த சர்ப்ரைஸை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். நன்றி” என பதிவிட்டுள்ளார்.

ஸ்டார்: பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஸ்டார்’. இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் நாளை (மே.9) திரையரங்குகளில் வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in