2024 இறுதியில் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ வெளியீடு: படக்குழு அறிவிப்பு

2024 இறுதியில் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ வெளியீடு: படக்குழு அறிவிப்பு

Published on

சென்னை: நடப்பாண்டு இறுதியில் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் சேர்த்து இந்த ஆண்டு கமலின் 3 படங்கள் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினர். இதையடுத்து சிம்பு, படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது தொடர்பான போஸ்டரையும், வீடியோவையும் படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில், ‘இந்தியன் 2’, ‘கல்கி 2898 ஏடி’, ‘தக் லைஃப்’ என கமல் நடிப்பில் 3 படங்கள் இந்த ஆண்டு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in