யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’

யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
Updated on
1 min read

சென்னை: விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கும், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’(கோட்) உட்பட சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில், இவர், ‘மணி இன்‌ தி பேங்க்' என்ற பெயரில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் நடித்திருப்பதுடன், எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த ஆல்பத்தை அபிஷேக் ரங்கநாதன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். ‘வாசல் வந்த பூவிது’ என்று தொடங்கும் இந்த தத்துவப் பாடலை வளைகுடா நாட்டில் படமாக்கியுள்ளனர். இந்த சுயாதீன இசை ஆல்பத்தின் வீடியோ, இணையத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in