Published : 30 Apr 2024 04:07 PM
Last Updated : 30 Apr 2024 04:07 PM

‘உறியடி’ விஜய்குமாரின் ‘எலக்சன்’ மே 17-ம் தேதி வெளியீடு

சென்னை: ‘உறியடி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் விஜய்குமாரின் புதிய படமான ‘எலக்சன்’ படம் மே 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ல் ‘உறியடி’, 2019-ல் ‘உறியடி 2’ படத்துக்குப் பின் நடிகர் விஜய்குமார் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இடைவெளிக்குப் பின் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது ‘ஃபைட் க்ளப்’. இந்தப் படம் சிறந்த மேக்கிங்கால் பாராட்டப்பட்டது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் விஜய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்துக்கு ‘எலக்சன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தை தமிழ் இயக்குகிறார். இவர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் தயாரிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சேத்துமான்’ படத்தின் இயக்குநர். இது அவரின் இரண்டாவது படம். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை ரீல் குட் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படம் வரும் மே 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x