அருண் விஜய்க்கு வில்லனாகும் கன்னட நடிகர்

அருண் விஜய்க்கு வில்லனாகும் கன்னட நடிகர்
Updated on
1 min read

சென்னை: நடிகர் அருண் விஜய், பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து கிரிஷ் திருக்குமரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் சித்தி இட்னானி, தான்யா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இசை அமைக்கிறார். இதில் பிரபல கன்னட நடிகர் யோகி வில்லனாக நடிக்க இருக்கிறார். இதுகுறித்து யோகி கூறும்போது, கன்னடத்தில் நான் நடித்த ஹெட் புஷ் படத்தைப் பார்த்து அருண் விஜய் படத்தில் நடிக்க அழைத்தார்கள். எனக்கு கதை பிடித்திருந்தது. உடனே சம்மதித்தேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in